முன்னோட்டத் தேர்வுத்தாள் தொகுப்புகள்

Wednesday, September 16, 2009

தமிழின மீட்பாளர், மாவீரர் பழ. நெடுமாறன்


வணக்கம்.
இப்புவியில் மனிதன் தோன்றிய காலந்தொட்டு தமிழனின் வீரமும் தியாகமும் எண்ணிப்பார்க்கையில் நம்மினத்தின் பெருமையும் புகழும் நன்கு புலப்படும். அதன் நிகழ்காலச் சான்றுகளாக நம் கண்முன்னே இன்றும் இருப்பவர்களில் தமிழினத்தின் தன்னிகரில்லாத் தலைவர், என் அண்ணன் மாவீரன் பிரபாகரன் ஒருவர் மட்டுமே. அவரது தியாகத்தையும் மேலும் பல உண்மைகளையும் உலகுக்கு உணர்த்த வேண்டி மலைநாடு வந்துள்ள ஐயா பழ. நெடுமாறன் அவர்களைக் காணும் பெரும்பாக்கியம் கிட்டியது.
அதன் இலத்திரன் படங்கள் இவை.

Monday, September 14, 2009

முதலாம் ஆண்டுப் பொதுக்கூட்டம்









வணக்கம்.
நமது கழகத்தின் முதலாம் ஆண்டுப் பொதுக்கூட்டம் கடந்த 12 செப்டம்பர் 2009, சனிக்கிழமை குளுவாங் அறிவியல் இடைநிலைப்பள்ளியில் நடைபெற்றது.
அதன் இலத்திரன் படங்கள் இவை.
நன்றி.

Thursday, September 10, 2009

பி.எம்.ஆர். கல்விக் கருத்தரங்கம்

வணக்கம்.

நமது கழகத்தின் அடுத்த நடவடிக்கையாக PMR கல்விக்கருத்தரங்கம் பின்வரும் விவரப்படி நடைபெற உள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

நாள் : 19.09.2009 (சனிக்க்கிழமை)
நேரம் : காலை 8.00 முதல் மாலை 5.00 வரை
இடம் : DK N24, மலேசியத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், ஸ்கூடாய் வளாகம். (DEWAN KULIAH N24, UTM, KAMPUS SKUDAI)
பாடங்கள் : மலாய் மொழி, ஆங்கில மொழி, தமிழ் மொழி, கணிதம், அறிவியல் (5 பாடங்கள்)
காலைச் சிற்றுண்டி , மதிய உணவு, மாலைத் தேனீர் உட்பட.
கட்டணம் : ரி.ம. 25 மட்டுமே

ஆசிரியப் பெருமக்கள் இவ்வாய்ப்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு தவறாது மாணவர்களைக் கலந்து கொள்ள ஊக்கப்படுத்துவதோடு அவர்கள் கலந்து கொள்வதை உறுதி செய்யுமாறு வேண்டுகிறோம்.

இக்கருத்தரங்கில் தேர்வு அணுகுமுறை, மாணவர்கள் பொதுவாகச் செய்யும் தவறுகள், இவ்வாண்டுக்கான முக்கியத் தலைப்புகள் ஆகியவை அனுபவமிக்க ஆசிரியர்களால் போதிக்கப்படும்.

மேலதிகத் தொடர்புக்கு :
திரு.ந.தமிழ்வாணன் - 0127116058
திரு. ப.சரவணநாதன் - 012-7347953

திரு. சு. இரவிச்சந்திரன் - 013-7689379
நன்றி.

செயற்குழுக் கூட்டம் 2




வணக்கம். நமது கழகத்தின் 2 ஆம் செயற்குழுக்கூட்டம் கடந்த 06.09.2009 ஞாயிற்றுக்கிழமை ஸ்கூடாய், தாமான் நேசா மண்டபத்தில் நடைபெற்றது.
அதன் ஒளிப்படங்கள் இவை.

Wednesday, August 26, 2009

தொல்காப்பிய வகுப்பு 3

ஆசிரியப் பெருந்தகைகளுக்கு,

வணக்கம்.

1) கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் தொல்காப்பிய வகுப்பு 3 எதிர்வரும் 28, 29 செப்டம்பர் 2009 ஆகிய இரு தினங்களுக்கு மாநிலக் கல்வி இலாகாவின் ஒத்துழைப்போடு நடைபெறவிருப்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அதன் விவரங்கள் பின்வருமாறு:

நாள் : 28, 29 செப்டம்பர் 2009
Tarikh : 28, 29 September 2009 (Isnin, Selasa)

இடம்:
மாநிலக் கல்வித் தொழில்நுட்பப் பிரிவு,
ஸ்கூடாய்
Tempat:
Bahagian Teknologi Pendidikan
Negeri, Taman Skudai Baru, Skudai, Johor

நேரம் :
காலை 8.30 (28.09.2009) முதல்
பிற்பகல் 1.00 (29.09.2009) வரை
Masa :
Bermula 8.30 pagi (28.09.2009)
hingga 1..00 tengahari (29.09.2009)


கடந்த வகுப்பில் ஐயா உயர்திரு சீனி நைனா முகம்மது அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க இவ்வகுப்பில் எளிய முறையிலான தேர்வு ஒன்று நடைபெற உள்ளது என்பதனையும் இங்கு நினைவூட்ட விரும்புகின்றோம். எனவே ஆசிரியர்கள் அனைவரும் தயார் நிலையில் வருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தொல்காப்பிய வகுப்பு 1 , வகுப்பு 2 ஆகியவற்றின் ஒலிப்பதிவும் குறிப்புகளும் ஆசிரியர் திரு. தமிழ்வாணன் (0127116058) அவர்களைத் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம். குறுவட்டின் (CD) விலை ரி.ம. 5 , அஞ்சல் செலவு ரி.ம. 2 மட்டும். வகுப்பு 2-இல் கலந்து கொள்ள இயலாதவர்கள் கண்டிப்பாகத் தொடர்பு கொள்ளுமாறு பணிவன்புடன் வேண்டுகின்றோம்.

நன்றி.

Tuesday, August 25, 2009

தொல்காப்பிய வகுப்பு 2 (09.08.2009)













தொடர்ந்து தொல்காப்பிய வகுப்பு 2 கடந்த 09.08.2009 ( ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. அதன் ஒளிப்படங்கள் இங்கே.

தொல்காப்பிய வகுப்பு 1 (29.6.2009)
















வகுப்பில் கலந்து பயன்பெற்ற ஆசிரியர்கள், மாணவர்கள், தமிழார்வலர்கள்

ஏற்பாடுக்குழுத்தலைவர் திரு. ஞா. வேதநாயகம், வகுப்பு நடத்துநர் மூதறிஞர், உங்கள் குரல் இதழாசிரியர் ஐயா உயர்திரு சீனி நைனா முகம்மது அவர்கள், ஜோகூர் மாநிலக் கல்வித்துறைத் துணை இயக்குநர் திரு. இரா.விஜயன் அவர்கள்

தலைமையுரை: கழகத்தின் தலைவர் திரு. ந.தமிழ்வாணன்
நமது கழகம் கடந்த 29.06.2009 திங்கட்கிழமையன்று (ஆட்சியாளர் நினைவுநாள் பொதுவிடுமுறை - Cuti Umum Hari HOL Negeri Johor) குளுவாங் மணிமண்டபத்தில் ஏற்பாடு செய்த தொல்காப்பிய வகுப்பில் மாநிலத்தின் இடைநிலைப்பள்ளி, ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள், தமிழார்வாலர்கள் என 63 பேர் கலந்து பயன்பெற்றனர்.

கழகம் ஏற்பாடு செய்த தொல்காப்பிய வகுப்பு 1 , வகுப்பு 2 ஒளிப்படங்கள்