முன்னோட்டத் தேர்வுத்தாள் தொகுப்புகள்

Wednesday, September 16, 2009

தமிழின மீட்பாளர், மாவீரர் பழ. நெடுமாறன்


வணக்கம்.
இப்புவியில் மனிதன் தோன்றிய காலந்தொட்டு தமிழனின் வீரமும் தியாகமும் எண்ணிப்பார்க்கையில் நம்மினத்தின் பெருமையும் புகழும் நன்கு புலப்படும். அதன் நிகழ்காலச் சான்றுகளாக நம் கண்முன்னே இன்றும் இருப்பவர்களில் தமிழினத்தின் தன்னிகரில்லாத் தலைவர், என் அண்ணன் மாவீரன் பிரபாகரன் ஒருவர் மட்டுமே. அவரது தியாகத்தையும் மேலும் பல உண்மைகளையும் உலகுக்கு உணர்த்த வேண்டி மலைநாடு வந்துள்ள ஐயா பழ. நெடுமாறன் அவர்களைக் காணும் பெரும்பாக்கியம் கிட்டியது.
அதன் இலத்திரன் படங்கள் இவை.

4 comments:

 1. மனித நேயமே இல்லாத காட்டுமிராண்டிக் கூட்டத்தினரால் ஒழித்துக் கட்டப்பட்டு, உரிமைகள் புதைக்கப்பட்டு அவதியுறும் அப்பாவித் தமிழ் மக்களுக்காகத் தம் வாழ்வையே ஈகம் செய்து வரும் ஐயா, மாவீரர் பழ, நெடுமாறனார் அவர்கள் வாழும் வரலாறு. காலடிச் சுவடுகள் வேண்டுமானால் அழிந்து விடலாம். ஆனால் காலச் சுவடுகள் அழியாமல் வரலாற்றைச் சொல்லிக் கொண்டே இருக்கும். இருப்பாய் தமிழா நெருப்பாய்.

  ReplyDelete
 2. தங்கள் மறுமொழிக்கு மிக்க நன்றி.

  இனித் தமிழீழத்தை மீட்டெடுப்பது உலகத் தமிழர்களின் கடமையாகும். அதிலும் மலேசியத் தமிழர்களுக்குப் பொறுப்பு அதிகம் உள்ளது. இதைச் செய்யத் தவறினால் மிகப் பெரிய வரலாற்றுப் பிழைக்கு நாம் ஆளாவோம். அதுவும் இவ்வாய்ப்பை நழுவ விட்டால் வேறெங்கும் இதைச் சாதிக்க முடியாது.

  உலகாண்ட தமிழன் இன்று நாடின்றி வீழ்ந்து கிடக்கின்றான். தன் மொழி, இனம், பண்பாடு அறியாதவனாய் நாயினும் இழிநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளான்.
  'உலகம் உலகம்' என்று பாடிய தமிழன் ஈழத்தில் இலட்சக்கணக்கில் கொல்லப்பட்டபோது ஏன் என்று கேட்க இந்த உலகம் முன்வரவில்லை.

  பிற நாடுகளில் வாழும் தமிழனுக்கு இன்னல் நேர்ந்தாலும் இதே நிலைதான் ஏற்படும். காரணம் நமக்கென்று ஒரு நாடில்லை.
  இதற்குத் தமிழீழம் ஒன்றே தீர்வு.

  ஐயா பழ. நெடுமாறன் கூறியது போல உலகத் தமிழன் இனி ஓரணியில் திரள வேண்டும். தமக்குள்ள வேறுபாடுகளை மறந்து தமிழீழத்திற்காகக் குரல் எழுப்ப வேண்டும். உலக யூதர்கள் ஒன்று சேர்த்து மூன்றே ஆண்டுகளில் இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கினர். தமிழீழம் அமைவதும் காலத்தின் கட்டாயம்.
  நன்றி.

  அன்புடன்,
  ந.தமிழ்வாணன்.

  ReplyDelete
 3. தவம் செய்வோம் வாரீர்; தமிழினத்திற்காக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தமிழனும் பிரார்த்தனை செய்வோம், ஒரே ஒரு நிமிடம். 60 வினாடிகள் கால அளவையில் மிகச் சிறியதாய்த் தோன்றலாம். உலகத் தமிழர்கள் அனைவரும் ஒருமித்து செய்கின்ற பிரார்த்தனைக்கு வலிமை அதிகம்.

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள் உங்களின் முயற்சிக்கும் கழகத்தின் துவக்கத்திர்க்கும். முடிந்தல் என்னோடு தொடர்பு வைத்துக்கொள்ளுங்கள்.

  ReplyDelete