முன்னோட்டத் தேர்வுத்தாள் தொகுப்புகள்

Saturday, May 16, 2009

கொடைநெஞ்சர் ,தன்முனைப்புப் பேச்சாளர், முனைவர் ஆதிசேஷன் அவர்களுக்கு நன்றி மலர்கள் சமர்ப்பணம்!


நமது மன்றத்தின் வெளியீடான ஆசிரியை குமாரி புஷ்பவள்ளி அவர்கள் எழுதிய 'SPM தமிழ் இலக்கிய வழிகாட்டி நூல்' அண்மையில் மலேசியத் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில் நடந்த SPM தமிழ் இலக்கிய கருத்தரங்கில் மிகச் சிறப்பாக வெளியீடு கண்டது. ஜோகூர் மாநிலக் கல்வித்துறை அதிகாரி , தமிழ் மொழித்துணை இயக்குநர் திரு. இரா. விஜயன் அவர்கள் முன்னிலை வகிக்க, கொடை நெஞ்சர், நாடறிந்த தன்முனைப்புப் பேச்சாளர் முனைவர் திரு. ஆதிசேஷன் அவர்கள் இந்நூலை வெளியீடு செய்தார்கள். இந்நூலை அச்சிட்டு வெளியிடுவதற்கான முழுச்செலவையும் ஏற்றுக்கொண்ட அன்னார் அவர்களின் அறப்பணிக்கும் நல்லெண்ணத்திற்கும் மன்றம் என்றென்றும் கடமைப்பட்டுள்ளது. மேலும் இந்நூல் சிறப்பான முறையில் வெளியீடு காண அரும்பாடு பட்ட ஜோகூர் மாநிலக் கல்வித்துறை அதிகாரி , தமிழ் மொழித்துணை இயக்குநர் திரு. இரா. விஜயன், தாமான் யூனிவர்சிட்டி இடைநிலைப்பள்ளி ஆசிரியர் திரு. சு. ரவிச்சந்திரன், ஸ்கூடாய் இடைநிலைப்பள்ளி ஆசிரியர் திரு. கு. பூபதி குப்புசாமி, கூலாய் சுல்தான் அப்துல் ஜாலில் இடைநிலைப்பள்ளி ஆசிரியர் தமிழ்மணி திரு. மு.மதியழகன், ஜோகூர் மாநில மாவட்டப் பாடக்குழுத் தலைவர்கள், ஜோகூர் மாநில இலக்கியப்பாட ஆசிரியர்கள் மற்றும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மன்றம் தனது நன்றி மலர்களைச் சமர்ப்பணம் செய்கின்றது.

Tuesday, May 12, 2009


நமது சங்கத்தின் நடவடிக்கைகளுள் ஒன்றாக 'SPM தமிழ் இலக்கிய வழிகாட்டி' நூல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியை குமாரி புஸ்பவள்ளி சக்திவேல் அவர்களின் அரிய முயற்சியால் படைக்கப்பட்டுள்ள இந்நூல் தற்பொழுது மாநிலம் முழுவதும் உள்ள இடைநிலைப்பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆசிரியப் பெருந்தகைகள் அனைவரும் மாணவர்களை வாங்குமாறு ஊக்கப்படுத்தி மன்றத்தின் நடவடிக்கைக்கு ஆதரவு நல்குமாறு வேண்டுகிறோம்.நன்றி.
ஆசிரியர் தின வாழ்த்துகள்!

ஜோகூர் மாநிலக் கல்வித்துறை துணை இயக்குநர் திரு. இரா. விஜயன் அவர்களுக்கும் ஜோகூர் மாநில தேசிய இடைநிலைப்பள்ளி ஆசிரியப் பெருந்தகைகளுக்கு மன்றம் தனது ஆசிரியர் தின வாழ்த்துகளைப் பதிவு செய்து கொள்கிறது.

'ஆசிரியப் பணி அறப்பணி, அதற்கே உன்னை அற்பணி!'

ஜோகூர் மாநில தேசிய இடைநிலைப்பள்ளி தமிழாசிரியர் சங்கம் உதயம்


ஜோகூர் மாநிலத்தில் இடைநிலைப்பள்ளி தமிழாசிரியர்களின் நலன் காக்க உதயமாகியுள்ளது ஜோகூர் மாநிலத்தில் இடைநிலைப்பள்ளி தமிழாசிரியர்கள் மன்றம். கடந்த ஜூலை 2008 அன்று பதிவு இலாகாவின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட இயக்கமாக உருப்பெற்றது இடைநிலைப்பள்ளி தமிழாசிரியர்களிடையே ஆர்வத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இம்மண்ணில் தமிழ் மொழியும் தமிழ் இலக்கியமும் வாழ வேண்டும்; வளம் பெற வேண்ணும் என்று முழங்கும் தமிழாசிரியர்களுக்கு இச்சங்கத்தின் உதயம் அவர்களின் அறப்பணிக்கு மேலும் வலுவூட்டுவதாக அமையும்.

இச்சங்கம் உருப்பெறுவதற்கு வித்திட்டவர் ஜோகூர் மாநில கல்வித்துறை தமிழ்பிரிவின் உதவி இயக்குநர், இரா.விஜயன் அவர்கள். அவர்களுக்கு ஜோகூர் மாநிலத்தில் இடைநிலைப்பள்ளி தமிழாசிரியர்கள் என்றென்றும் கடமைப்பட்டுள்ளனர்.