முன்னோட்டத் தேர்வுத்தாள் தொகுப்புகள்

Thursday, September 10, 2009

பி.எம்.ஆர். கல்விக் கருத்தரங்கம்

வணக்கம்.

நமது கழகத்தின் அடுத்த நடவடிக்கையாக PMR கல்விக்கருத்தரங்கம் பின்வரும் விவரப்படி நடைபெற உள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

நாள் : 19.09.2009 (சனிக்க்கிழமை)
நேரம் : காலை 8.00 முதல் மாலை 5.00 வரை
இடம் : DK N24, மலேசியத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், ஸ்கூடாய் வளாகம். (DEWAN KULIAH N24, UTM, KAMPUS SKUDAI)
பாடங்கள் : மலாய் மொழி, ஆங்கில மொழி, தமிழ் மொழி, கணிதம், அறிவியல் (5 பாடங்கள்)
காலைச் சிற்றுண்டி , மதிய உணவு, மாலைத் தேனீர் உட்பட.
கட்டணம் : ரி.ம. 25 மட்டுமே

ஆசிரியப் பெருமக்கள் இவ்வாய்ப்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு தவறாது மாணவர்களைக் கலந்து கொள்ள ஊக்கப்படுத்துவதோடு அவர்கள் கலந்து கொள்வதை உறுதி செய்யுமாறு வேண்டுகிறோம்.

இக்கருத்தரங்கில் தேர்வு அணுகுமுறை, மாணவர்கள் பொதுவாகச் செய்யும் தவறுகள், இவ்வாண்டுக்கான முக்கியத் தலைப்புகள் ஆகியவை அனுபவமிக்க ஆசிரியர்களால் போதிக்கப்படும்.

மேலதிகத் தொடர்புக்கு :
திரு.ந.தமிழ்வாணன் - 0127116058
திரு. ப.சரவணநாதன் - 012-7347953

திரு. சு. இரவிச்சந்திரன் - 013-7689379
நன்றி.

செயற்குழுக் கூட்டம் 2
வணக்கம். நமது கழகத்தின் 2 ஆம் செயற்குழுக்கூட்டம் கடந்த 06.09.2009 ஞாயிற்றுக்கிழமை ஸ்கூடாய், தாமான் நேசா மண்டபத்தில் நடைபெற்றது.
அதன் ஒளிப்படங்கள் இவை.