முன்னோட்டத் தேர்வுத்தாள் தொகுப்புகள்

Sunday, August 26, 2012

பிற மாநிலங்களின் தேர்வுத் தாட்கள்

பிற மாநிலங்களின் பி.எம்.ஆர். முன்னோட்டத்தேர்வுத் தாட்களின் தொகுப்பு
மலாய் மொழி, ஆங்கிலம், கணிதம், அறிவியல், சரித்திரம், வாழ்வியல் கல்வி ஆகியவை

http://www.ziddu.com/download/20198389/PMR_PERC_2012_SEMUANEGERI.rar.html

ஜொகூர் மாநிலப் பி.எம்.ஆர். முன்னோட்டத் தேர்வுத்தாட்கள் - தமிழ்மொழி

  ஜொகூர் மாநிலப் பி.எம்.ஆர். முன்னோட்டத்  தேர்வுத்தாட்கள் - தமிழ்மொழி

KERTAS SOALAN  PEPERIKSAAN PERCUBAAN PMR
MATAPELAJARAN BAHASA TAMIL 2010-2012

ஆண்டு   2010

தாள் 1
http://www.ziddu.com/download/20138207/JULANG_PMR2010_BTAMIL_KERTAS1.doc.html

தாள் 2
http://www.ziddu.com/download/20138209/JULANG_PMR2010_BTAMIL_KERTAS2.doc.html

விடைகள்
http://www.ziddu.com/download/20138212/JULANGPMRBTAMIL2010_SKEMA.doc.html

ஆண்டு   2011

தாள் 1
http://www.ziddu.com/download/20138150/PTT2011_T3_BT_K1_JOHOR.doc.html

தாள் 2
http://www.ziddu.com/download/20138146/PTT2011_T3_BT_K2_JOHOR.doc.html

விடைகள்
http://www.ziddu.com/download/20138169/PTT2011_BT_T3_K2_SKEMA_JOHOR.doc.html


ஆண்டு  2012

தாள் 1
http://www.ziddu.com/download/20138185/BTK1_JULANG_PMR_2012.pdf.html

தாள் 2
http://www.ziddu.com/download/20138188/BTK2_JULANG_PMR_2012.pdf.html


விடைகள் -தாள் 1
http://www.ziddu.com/download/20138190/SKEMA_BTK1_JULANG_PMR_2012.pdf.html

விடைகள் - தாள் 2
http://www.ziddu.com/download/20138191/SKEMA_BTK2_JULANG_PMR_2012.pdf.html

ஆசிரியப் பெருமக்களும் மாணவச் செல்வங்களும் இக்கேள்வித்தாட்களைப் பிறருடனும் பகிர்ந்து கொள்ளவும்.
நன்றி.

தமிழ்வாழ்த்து (கவிஞர் சீனி நைனா முகமது)             தமிழ்வாழ்த்து
(இறையருட் கவிஞர் ஐயா 
 திரு. சீனி நைனா முகமது)


காப்பியனை     ஈன்றவளே! காப்பியங்கள்    கண்டவளே!
கலைவளர்த்த    தமிழகத்தின் தலைநிலத்தில்     ஆள்பவளே!
தாய்ப்புலமை     யாற்புவியில்  தனிப்பெருமை    கொண்டவளே!
தமிழரொடு      புலம்பெயர்ந்து  தரணியெங்கும்     வாழ்பவளே!

எங்களெழில் மலைசியத்தில்  சிங்கைதனில் ஈழமண்ணில்
இலக்கியமாய் வழக்கியலாய்  இனக்காவல் தருபவளே!
பொங்கிவளர் அறிவியலின்   புத்தாக்கம் அத்தனைக்கும்
பொருந்தியின்று மின்னுலகில்  புரட்சிவலம் வருபவளே!

செவ்வியலின் இலக்கியங்கள்  செழித்திருந்த பொற்காலம்
சேர்த்துவைத்த செயுள்வளத்தில்  செம்மாந்த பழையவளே!
அவ்வியலில் வேரூன்றி  அறிவுயர்ந்த தற்காலம்
அழகழகாய் உரைநடையும்  ஆளுகின்ற புதியவளே!

குலங்கடந்து   நெறிகடந்து  நிலவரம்பின்    தடைகடந்து
கோமகளாய்த்   தமிழர்மனம்  கொலுவிருக்கும்  தமிழணங்கே!
நிலவினுக்கே    பெயர்ந்தாலும்  நினதாட்சி     தொடருமம்மா!
நிறைகுறையாச்  செம்மொழியே  நிலைபெறநீ வாழியவே !

தமிழ்மொழி - இலக்கணம்


 
      செந்தமிழர் போற்றும் பைந்தமிழில் வாக்கிய அமைப்பு என்பது மிகவும் நுட்பமானதாகும். தமிழ் மொழியினைப் பொறுத்தவரை அதன் வாக்கிய அமைப்பு பற்றி அறிந்து கொள்வதற்கு வாக்கியத்தின் மூன்று உறுப்புக்களான எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் குறித்து முதலில் நன்கு விளங்கிக்கொள்ளுதல் அவசியமாகும். கருத்துள்ள வாக்கியம் ஒன்றனை அமைப்பதில் இவற்றின் பங்கு மிக முக்கியமானதாய் அமைகின்றது.

      சொற்கள் சில ஒன்று சேர்ந்து பொருள் தருமாயின் அதைச் சொற்றொடர் என்கிறோம். நிறுத்தற்குறிகள் சரியாக அமைந்திருப்பின் அச்சொற்றொடரை வாக்கியம் என்கிறோம். ஒரு வாக்கியம் அடிப்படையில் எழுவாய், பயனிலை உறுப்புக்களை கொண்டிருக்கும். இவற்றுடன் செயப்படுபொருள் என்ற மற்றுமோர் உறுப்பும் வாக்கியத்தில் இணைந்து வாக்கியத்தின் முக்கிய உறுப்புக்களை மூன்று வகையாக பிரிக்க வழிவகுத்துள்ளது. ஒரு வாக்கியத்தைப் பொறுத்தவரை அது தோன்றுவதற்கும் அவ்வாக்கியத்தில் நடைபெறும் செயலைச் செய்பவரைக் காட்டுவதற்கும் எழுவாய் முக்கியமானது.

      அமுதன் மரத்தை வெட்டினான் என்ற வாக்கியத்தில் வெட்டுதல் என்ற செயற்பாட்டினை செய்யும் அமுதன் என்ற பெயர்ச்சொல்லினை எழுவாயாகக் குறிப்பிடுகிறோம். இங்கு நாம் கவனிக்க வேண்டிய ஒரு விடையம் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பெயர்ச்சொற்களே எழுவாயாக வருவதுண்டு. சிலவேளைகளில் மிகவும் அரிதாக நிகழ்கால வினையெச்சங்களும் எழுவாயாக வருகின்றன. அத்தோடு சில வாக்கியங்களில் பல எழுவாய்கள் காணப்படலாம். இவ்வாக்கியத்தின் பயனிலை பன்மையில் முடிவடைவதனை நீங்கள் காணலாம். 

      அடுத்ததாக பயனிலை பற்றிப் பார்ப்போம். ஒரு வாக்கியத்தில் எழுவாய் செய்கின்ற தொழிலைக் குறித்து நிற்பது பயனிலை எனப்படும். ஒரு வாக்கியத்தைப் பொருளுடையதாக முடித்துவைப்பதும் பயனிலையே. உதாரணமாகக் அமுதன் படித்தான் என்ற வாக்கியத்தில் அமுதன் என்ற எழுவாயின் படித்தல் என்ற தொழிலினைக் காட்டி வந்த படித்தான்என்பதே பயனிலை. பயனிலை காலம் காட்டும். 

      ஒரு வாக்கியத்தில் எழுவாய் ஒரு செயலைச் செய்கின்றது. எழுவாய் செய்கின்ற செயலைப் பயனிலை காட்டி நிற்கிறது. எனவே செயலினைச் செய்தவர் எழுவாயாகவும் செயல் பயனிலையாகவும் இருக்கின்ற போது அச்செயல் எதன்மீது செய்யப்பட்டது? அல்லது அச்செயலினை ஏற்கும் பொருள் எதுவோ அதுவே செயப்படுபொருள் எனப்படும்.

      உதாரணமாக வேந்தன் மரத்தை வெட்டினான் என்ற வாக்கியத்தில் யார் வெட்டினான்? என்ற வினாவுக்கான விடை எழுவாய். வேந்தன் என்ன செய்தான்? என்ற வினாவிற்கான விடை பயனிலை. வேந்தன் எதை வெட்டினான்? என்ற  வினாவிற்கான விடை செயப்படுபொருள் எனக் கொள்க. எனவே செயப்படுபொருள் என்பது பயனிலைக்கு முன்னால் எதை? யாரை? எவற்றை? போன்ற வினாக்களை இட்டு கேட்கப்படும் கேள்விகளுக்குக் கிடைக்கும் விடையாகும். 

      பல சந்தர்ப்பங்களில் செயப்படுபொருள் வெளிப்படாமலும் கருத்துள்ள வாக்கியங்கள் அமைந்துவிடுவதுண்டு. செயப்படுபொருள் தெளிவாகவோ அல்லது மறைந்திருக்குமாயின் அவ்வாக்கியத்தைச் செயப்படுபொருள் குன்றாவினை வாக்கியம் என்று அழைக்கப்படும். செயப்படுபொருள் இல்லாமல் அமையும் வாக்கியத்தினைச் செயப்படுபொருள் குன்றியவினை வாக்கியம் என்கிறோம்.

                                            தமிழாசிரியர் திரு ந.தமிழ்வாணன், ஸ்கூடாய் இடைநிலைப்பள்ளி.

தமிழ்மொழி - கருத்துணர்தல்


தமிழ்மொழி படிவம் 4-5
கருத்துணர்தல்

கேள்விகள் 1 - 5
கொடுக்கப்பட்டுள்ள சிறுகதைப் பகுதியை வாசித்து, தொடர்ந்துவரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.

காலை 7.00 மணிக்கே பள்ளிக்குச் சென்று விட்டேன். மாணவர்கள் பரபரப்பாக ஏற்பாட்டுப் பணிகளில் இயங்கிக் கொண்டிருந்தார்கள். செல்வராசு, எனக்கு முன்பே வந்து பரபரப்பாக அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தார். தன் பேச்சுக்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார். எல்லா ஏற்பாடுகளும் மிக நேர்த்தியாகச் செய்து கொண்டிருந்த மாணவர்களைப் பார்த்ததும் என் மனம் லேசாய் இளகிப் போனது. எண்ணிப் பார்க்க முடியாத மாணவர்கள் கூட வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வதைப் பார்த்த போது, துலக்குவதற்கு ஒருவர் மட்டும் இருந்தால், இவர்களை எங்கோ தூக்கி வைத்து விடலாம் என்பது மட்டும் புரிந்தது.

நேரம் 9.30ஐ நெருங்க-நெருங்க பெற்றோர்கள் ஒவ்வொருவராக வரத் தொடங்கினர். ஆனால், மனதிற்குள் ஏதோ ஒன்று நெருடவே செய்தது. கூட்டம் இந்நேரம் பாதியாவது நிறைந்திருக்க வேண்டும் என்ற உள்ளுணர்வு ஓரத்தில் உறுத்திக்கொண்டே இருந்தது. நேரம் செல்ல - செல்ல ஒரு போராட்டமே உருவாகத் தொடங்கி இருந்தது. பத்து மணிக்கு நிகழ்வைத் தொடங்கலாம் என்றிருந்த எங்களுக்கு, அதுவரை 30 பேர் கூட வந்திராதது அடிவயிற்றையே கலக்க ஆரம்பித்தது. நான் செல்வராசுவின் முகத்தை ஏறிட்டுப் பார்க்கிறேன். எந்தக் கலவரமும் இல்லாமல் அப்போதும் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டுதான் இருந்தார்.

மணி 10.30ஐ நெருங்கியது. எழுநூறு பேரை எதிர்பார்த்த இடத்தில் வெறும் அறுபத்திரண்டு பேர் மட்டும் வந்திருந்தனர். இனியும் வருவார்கள் என்ற நம்பிக்கை கரைந்து போயிருந்த நிலையில்,

"சார்! இருக்கிறவங்கள வெச்சி ஆரம்பிப்போம். இனி வருகிறவங்க வரட்டும். நாம் காத்திருக்க வேண்டாம்." என்று செல்வராசு தோளைப்பற்றிக் கொண்டு சொன்னபோது, உள்ளம் முழுமையாய் ஒடிந்து விழுந்தது. "சரி" என்றேன். வந்த எண்ணிக்கையை வைத்துக் கொண்டு நிகழ்வு தொடங்கியது.

வந்திருந்தோரை நோட்டம் இடுகிறேன். எந்தச் சிக்கலையும் தராத மாணவர்களின் பெற்றோர்கள் தான் நிறைந்திருந்தனர். யாரை எதிர்ப்பார்த்தோமோ அவர்கள் வராதது, உள்ளத்தைக் கலக்கவே செய்தது. எதுவோ இனம் புரியாத ஒன்று உணர்வைக் குடையத் தொடங்கியது.

"...இங்க பாருங்க சார், இந்தச் சமுதாயம் முழுவதுமா புரையோடிப் போன சமுதாயம். இதற்கு மருந்து போட்டு மருத்துவம் பார்க்க நினைப்பது நாய குளிப்பாட்டி நடுவீட்டில வைக்கிற மாதிரி. பேசாம உருப்படியான வேலையைப் பாருங்க....," என்று நக்கலாகச் சொன்ன சங்கரன் ஆசிரியரின் கூற்று கூட உண்மைதானோ? எல்லா முயற்சியும் அவர் சொன்னதைப் போல வீண் தானோ? உள்ளம் உண்மையிலேயே தடுமாறத் தொடங்கியது. காலியான நாற்காலிகள் எல்லாம் என்னைப் பார்த்து ஏளனமாய் சிரிப்பதைப் போன்றிருந்தது.

நிகழ்ச்சிக்குப் பெற்றோரின் வருகை தவிர எல்லாமும் சிறப்பாகவே நடந்து முடிந்தது. ஆனால், உள்ளத்தின் தெம்பெல்லாம் எங்கோ ஓடி ஒளிந்து கொண்டதை உண்மையாக உணர முடிந்தது.

                  பேரவைக் கதைகள் - நீரோடை (மு. தமிழரசு)


1.     18வது வரியில் "நம்பிக்கை கரைந்து போயிருந்த நிலையிலும்" எனும் தொடர் எதைக் குறிக்கின்றது?                                  [2 புள்ளிகள்]
   ______________________________________________________________________
   ______________________________________________________________________
   ______________________________________________________________________

2.     எத்தகைய பெற்றோர்களுக்காக இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது?
                                                    [2 புள்ளிகள்]
   ______________________________________________________________________
   ______________________________________________________________________
   ______________________________________________________________________

3.     "இந்தச் சமுதாயம் முழுவதுமா புரையோடிப் போன சமுதாயம்" எனும் தொடர் எதனைக் குறிக்கிறது?                                   [4 புள்ளிகள் ]
_____________________________________________________________________
_____________________________________________________________________
_____________________________________________________________________

4.     ஆசிரியர் செல்வராசு  எத்தகைய எண்ணம் கொண்டவர்?           
                                                   [ 2 புள்ளிகள் ]
   _____________________________________________________________________
   _____________________________________________________________________

5.     மாணவர்கள் நலன் கருதி நடத்தப்படும் நிகழ்வுகளுக்குப் பெற்றோர்கள் ஆர்வம்      காட்டாமல் இருப்பதற்கான காரணங்கள் யாவை?         [ 4 புள்ளிகள் ]
   _____________________________________________________________________
   _____________________________________________________________________
   _____________________________________________________________________
   _____________________________________________________________________
     

                      தயாரிப்பு: தமிழாசிரியர் திரு. .தமிழ்வாணன்
                               ஸ்கூடாய் இடைநிலைப்பள்ளி