முன்னோட்டத் தேர்வுத்தாள் தொகுப்புகள்

Tuesday, May 28, 2013

நேர்காணல்



மாதிரி  பி.எம்.ஆர். வழிகாட்டிக் கட்டுரை
 
நேர்காணல்

அண்மையில் நடைபெற்ற மலேசியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் புகழ்பெற்றச் சிறுகதை எழுத்தாளர் திரு. கவின்செல்வன் அவர்களுக்குஇலக்கியச்செம்மல்எனும் பட்டம் வழங்கிச் சிறப்பு செய்யப்பட்டது. அதன் தொடர்பில் மக்கள் நண்பன்நாளிதழுக்காக நிருபர் .மதிவாணன் அவரை நேர்காணல் செய்த  போது

மதி:              வணக்கம் திரு. கவின்செல்வன் அவர்களே!  இலக்கியச்செம்மல்எனும்         
                    பட்டம்  பெற்றதற்காக  மக்கள் நண்பன்நாளிதழ் சார்பில் தங்களுக்கு                     வாழ்த்துத் தெரிவித்து நேர்காணல் செய்ய வந்திருக்கிறேன்.

திரு. கவின்:   என்னை நன்றாக இறைவன் படைத்தனன் 
                    தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறு!’  
                    மிக்க மகிழ்ச்சி, தங்களின் வாழ்த்துக்கு நன்றி.

மதி:              தங்களுக்கு எப்படி சிறுகதையில் ஈடுபாடு வந்தது?

திரு. கவின்:   அடியேனுக்குச் சிறுவயது முதலே கதைகள் எழுதுவதென்றால் ஆர்வம்.  
                  நிறைய கதைப்புத்தகங்களை வாசிப்பேன். பின்னர் நான் கற்றவற்றைப்  
                  பிறருக்குத் தெரிவிக்கும் பொருட்டு  சிறுகதைகளை எழுதினேன். மேலும்  
                  ‘பேரவைக்கதைகள்எனும் சிறுகதைப்  போட்டிக்கும் என் கதைகளை  
                  எழுதி   அனுப்பினேன். பின்னர் என் சிறுகதைகளுக்கு  நல்ல வரவேற்பு  
                  கிடைத்ததால்  தொகுப்பு  நூல்களாக வெளியிட முயற்சி செய்தேன் 
                  அவ்வாறு   பிறந்த எனது  சிறுகதைத் தொகுப்பான விடியலை நோக்கிஎனும்  
                  நூலுக்காகத்தான் இப்பட்டம் வழங்கப்பட்டுள்ளது

மதி:            கேட்கவே உச்சிக் குளிர்கிறது, ஐயா. இந்தச் சிறுகதைத் தொகுப்பின்  
                 நோக்கம்  என்ன?

திரு. கவின்:   நம் சமுதாயத்தில் நடக்கும்  அவலங்களை மக்களுக்குத் தெரிவித்து விழிப்பு  
                  நிலையை உண்டாக்குவதே இதன்  நோக்கம். மேலும்  இந்திய சமுதாயத்தின்   
                  தேவைகளை  வெளிக்கொணரவும் வேண்டும்.

மதி:             தங்களின் இந்த நோக்கம் வெற்றியடைய   வாழ்த்துகிறேன். மேலும் தங்களின்  
                  மாறுபட்ட  சிந்தனைப்  போக்கு  வாசகர்களிடையே   தாக்கத்தை ஏற்படுத்தும்   
                  என்று நினைக்கிறேன்.  

திரு. கவின்:   நிச்சயமாக. நம் நாட்டில் தற்போது இலக்கியப்  படைப்புகளுக்கு நல்ல  
                  வரவேற்பு  கிடைக்கிறது.   நிறைய வாசகர்கள் இலக்கியப்  
                  படைப்புகளை விரும்பிப் படிக்கின்றனர்.

மதி:              இறுதியாக, எழுத்துத்துறையில் தாங்கள் சாதிக்க  விரும்புவது என்ன ஐயா?

திரு. கவின்:   இலக்கியப் பணியில் என்னை முழுமையாக  ஈடுபடுத்திக்கொண்டு நமது  
                  சமுதாயச்  சீர்கேடுகளைத் துடைத்தொழிப்பதே நான் சாதிக்க விரும்புவது.

மதி:              தங்கள் எண்ணம் ஈடேற இறையருள்  நிறையட்டும். பேட்டிக்கு நன்றி.

திரு. கவின்:   மக்கள் நண்பன்நாளிதழுக்கும் தங்களுக்கும் என்  நன்றி. வணக்கம்.

                        ஆக்கம்:   .மதிவாணன் 3PM3
                                           ஸ்கூடாய் இடைநிலைப்பள்ளி

No comments:

Post a Comment