ஆசிரியப் பெருந்தகைகளுக்கு,
வணக்கம்.
1) கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் தொல்காப்பிய வகுப்பு 3 எதிர்வரும் 28, 29 செப்டம்பர் 2009 ஆகிய இரு தினங்களுக்கு மாநிலக் கல்வி இலாகாவின் ஒத்துழைப்போடு நடைபெறவிருப்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அதன் விவரங்கள் பின்வருமாறு:
நாள் : 28, 29 செப்டம்பர் 2009
Tarikh : 28, 29 September 2009 (Isnin, Selasa)
இடம்: மாநிலக் கல்வித் தொழில்நுட்பப் பிரிவு,
ஸ்கூடாய்
Tempat: Bahagian Teknologi Pendidikan
Negeri, Taman Skudai Baru, Skudai, Johor
நேரம் : காலை 8.30 (28.09.2009) முதல்
பிற்பகல் 1.00 (29.09.2009) வரை
Masa : Bermula 8.30 pagi (28.09.2009)
hingga 1..00 tengahari (29.09.2009)
கடந்த வகுப்பில் ஐயா உயர்திரு சீனி நைனா முகம்மது அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க இவ்வகுப்பில் எளிய முறையிலான தேர்வு ஒன்று நடைபெற உள்ளது என்பதனையும் இங்கு நினைவூட்ட விரும்புகின்றோம். எனவே ஆசிரியர்கள் அனைவரும் தயார் நிலையில் வருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
தொல்காப்பிய வகுப்பு 1 , வகுப்பு 2 ஆகியவற்றின் ஒலிப்பதிவும் குறிப்புகளும் ஆசிரியர் திரு. தமிழ்வாணன் (0127116058) அவர்களைத் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம். குறுவட்டின் (CD) விலை ரி.ம. 5 , அஞ்சல் செலவு ரி.ம. 2 மட்டும். வகுப்பு 2-இல் கலந்து கொள்ள இயலாதவர்கள் கண்டிப்பாகத் தொடர்பு கொள்ளுமாறு பணிவன்புடன் வேண்டுகின்றோம்.
நன்றி.
No comments:
Post a Comment