முன்னோட்டத் தேர்வுத்தாள் தொகுப்புகள்

Thursday, September 10, 2009

பி.எம்.ஆர். கல்விக் கருத்தரங்கம்

வணக்கம்.

நமது கழகத்தின் அடுத்த நடவடிக்கையாக PMR கல்விக்கருத்தரங்கம் பின்வரும் விவரப்படி நடைபெற உள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

நாள் : 19.09.2009 (சனிக்க்கிழமை)
நேரம் : காலை 8.00 முதல் மாலை 5.00 வரை
இடம் : DK N24, மலேசியத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், ஸ்கூடாய் வளாகம். (DEWAN KULIAH N24, UTM, KAMPUS SKUDAI)
பாடங்கள் : மலாய் மொழி, ஆங்கில மொழி, தமிழ் மொழி, கணிதம், அறிவியல் (5 பாடங்கள்)
காலைச் சிற்றுண்டி , மதிய உணவு, மாலைத் தேனீர் உட்பட.
கட்டணம் : ரி.ம. 25 மட்டுமே

ஆசிரியப் பெருமக்கள் இவ்வாய்ப்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு தவறாது மாணவர்களைக் கலந்து கொள்ள ஊக்கப்படுத்துவதோடு அவர்கள் கலந்து கொள்வதை உறுதி செய்யுமாறு வேண்டுகிறோம்.

இக்கருத்தரங்கில் தேர்வு அணுகுமுறை, மாணவர்கள் பொதுவாகச் செய்யும் தவறுகள், இவ்வாண்டுக்கான முக்கியத் தலைப்புகள் ஆகியவை அனுபவமிக்க ஆசிரியர்களால் போதிக்கப்படும்.

மேலதிகத் தொடர்புக்கு :
திரு.ந.தமிழ்வாணன் - 0127116058
திரு. ப.சரவணநாதன் - 012-7347953

திரு. சு. இரவிச்சந்திரன் - 013-7689379
நன்றி.

செயற்குழுக் கூட்டம் 2




வணக்கம். நமது கழகத்தின் 2 ஆம் செயற்குழுக்கூட்டம் கடந்த 06.09.2009 ஞாயிற்றுக்கிழமை ஸ்கூடாய், தாமான் நேசா மண்டபத்தில் நடைபெற்றது.
அதன் ஒளிப்படங்கள் இவை.

Wednesday, August 26, 2009

தொல்காப்பிய வகுப்பு 3

ஆசிரியப் பெருந்தகைகளுக்கு,

வணக்கம்.

1) கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் தொல்காப்பிய வகுப்பு 3 எதிர்வரும் 28, 29 செப்டம்பர் 2009 ஆகிய இரு தினங்களுக்கு மாநிலக் கல்வி இலாகாவின் ஒத்துழைப்போடு நடைபெறவிருப்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அதன் விவரங்கள் பின்வருமாறு:

நாள் : 28, 29 செப்டம்பர் 2009
Tarikh : 28, 29 September 2009 (Isnin, Selasa)

இடம்:
மாநிலக் கல்வித் தொழில்நுட்பப் பிரிவு,
ஸ்கூடாய்
Tempat:
Bahagian Teknologi Pendidikan
Negeri, Taman Skudai Baru, Skudai, Johor

நேரம் :
காலை 8.30 (28.09.2009) முதல்
பிற்பகல் 1.00 (29.09.2009) வரை
Masa :
Bermula 8.30 pagi (28.09.2009)
hingga 1..00 tengahari (29.09.2009)


கடந்த வகுப்பில் ஐயா உயர்திரு சீனி நைனா முகம்மது அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க இவ்வகுப்பில் எளிய முறையிலான தேர்வு ஒன்று நடைபெற உள்ளது என்பதனையும் இங்கு நினைவூட்ட விரும்புகின்றோம். எனவே ஆசிரியர்கள் அனைவரும் தயார் நிலையில் வருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தொல்காப்பிய வகுப்பு 1 , வகுப்பு 2 ஆகியவற்றின் ஒலிப்பதிவும் குறிப்புகளும் ஆசிரியர் திரு. தமிழ்வாணன் (0127116058) அவர்களைத் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம். குறுவட்டின் (CD) விலை ரி.ம. 5 , அஞ்சல் செலவு ரி.ம. 2 மட்டும். வகுப்பு 2-இல் கலந்து கொள்ள இயலாதவர்கள் கண்டிப்பாகத் தொடர்பு கொள்ளுமாறு பணிவன்புடன் வேண்டுகின்றோம்.

நன்றி.

Tuesday, August 25, 2009

தொல்காப்பிய வகுப்பு 2 (09.08.2009)













தொடர்ந்து தொல்காப்பிய வகுப்பு 2 கடந்த 09.08.2009 ( ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. அதன் ஒளிப்படங்கள் இங்கே.

தொல்காப்பிய வகுப்பு 1 (29.6.2009)
















வகுப்பில் கலந்து பயன்பெற்ற ஆசிரியர்கள், மாணவர்கள், தமிழார்வலர்கள்

ஏற்பாடுக்குழுத்தலைவர் திரு. ஞா. வேதநாயகம், வகுப்பு நடத்துநர் மூதறிஞர், உங்கள் குரல் இதழாசிரியர் ஐயா உயர்திரு சீனி நைனா முகம்மது அவர்கள், ஜோகூர் மாநிலக் கல்வித்துறைத் துணை இயக்குநர் திரு. இரா.விஜயன் அவர்கள்

தலைமையுரை: கழகத்தின் தலைவர் திரு. ந.தமிழ்வாணன்
நமது கழகம் கடந்த 29.06.2009 திங்கட்கிழமையன்று (ஆட்சியாளர் நினைவுநாள் பொதுவிடுமுறை - Cuti Umum Hari HOL Negeri Johor) குளுவாங் மணிமண்டபத்தில் ஏற்பாடு செய்த தொல்காப்பிய வகுப்பில் மாநிலத்தின் இடைநிலைப்பள்ளி, ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள், தமிழார்வாலர்கள் என 63 பேர் கலந்து பயன்பெற்றனர்.

கழகம் ஏற்பாடு செய்த தொல்காப்பிய வகுப்பு 1 , வகுப்பு 2 ஒளிப்படங்கள்

Tuesday, August 4, 2009

SPM இலக்கிய வழிகாட்டி நூல் வெளியீட்டு விழா






SPM இலக்கியப் பாடம் வழிகாட்டிக் கருத்தரங்கில் கலந்து கொண்ட மாணவர்களும் ஆசிரியர்களும்
ஏற்பாடு : ஜோகூர் மாநில இலக்கியக் கழகமும் ஜோகூர் மாநிலத் தேசிய இடைநிலைப்பள்ளித் தமிழாசிரியர்கள் கழகமும்






'SPM இலக்கியப் பாடம் கருத்தரங்கோடு SPM இலக்கிய வழிகாட்டி நூல் வெளியீடு கண்ட நிகழ்வில் கான்வெண்ட் இடைநிலைப்பள்ளி மாணவிகள் படைத்த 'காவிய நாயகி' நாடகம்.

Pelajar-pelajar SMK Infant Jesus Convent, Johor Bahru

ஸ்கூடாய் வட்டார இடைநிலைப்பள்ளிகள் சார்பில் ஆசிரியர் திரு. கு. பூபதி
En. K. Poobathy, Ketua Panitia Bahasa Tamil , SMK Skudai.

ஜோகூர்பாரு மாவட்டத் தமிழ்மொழிப்பாடக்குழுத் தலைவர் குமாரி இரா.புஷ்பலதா அவர்கள் மாவட்டத்தின் சார்பில் நூல்களைப் பெறுகின்றார்.
Cik R.Pushpalatha (Guru Cemerlang) Setiausaha Panitia Bahasa Tamil Daerah Johor Bahru, SMK Sri Rahmat, Johor Bahru.


கவிதைப் படைப்பாளர் திரு.சு.இரவிச்சந்திரன், SMK TAMAN UNIVERSITI, SKUDAI

நாவல் படைப்பாளர் ஆசிரியர் தமிழ்மணி திரு மு.மதியழகன்,
SMK SULTAN IBRAHIM, KULAI, JOHOR

நூலாசிரியர் குமாரி புஷ்பவள்ளி சக்திவேல்.
SMK TAMAN SELESA JAYA, SKUDAI, JOHOR


தொழில் முனைவர், கொடை நெஞ்சர், தன்முனைப்புப் பேச்சாளர், இனிய பண்பாளர் உயர்திரு ஆதிசேஷன் அவர்கள்
உயர்திரு இரா.விஜயன் அவர்கள்,
தமிழ்ப்பிரிவு துணை இயக்குநர், ஜோகூர் மாநிலக் கல்வித்துறை,
EN. R.VIJAYAN, PENOLONG PENGARAH BAHASA TAMIL,
JABATAN PELAJARAN NEGERI JOHOR

நிகழ்ச்சி நெறியாளர் ஆசிரியர் திரு.சு.இரவிச்சந்திரன்,
SMK TAMAN UNIVERSITI, SKUDAI





வெளியீடு காணவிருக்கும் நூல் தயார் நிலையில்


வணக்கம். அண்மையில் நமது கழகம் SPM இலக்கிய வழிகாட்டி நூலினை வெளியிட்டது அனைவரும் அறிந்ததே. தொழில் முனைவர், கொடை நெஞ்சர், தன்முனைப்புப் பேச்சாளர், இனிய பண்பாளர் திரு. ஆதிசேஷன் அவர்கள் இந்நூலினை மிகவும் எளிய முறையில் நடந்தேறிய நிகழ்வில் வெளியீடு செய்தார். அதன் நிழற்படங்களை இங்கு காணலாம்.