முன்னோட்டத் தேர்வுத்தாள் தொகுப்புகள்

Saturday, May 16, 2009

கொடைநெஞ்சர் ,தன்முனைப்புப் பேச்சாளர், முனைவர் ஆதிசேஷன் அவர்களுக்கு நன்றி மலர்கள் சமர்ப்பணம்!


நமது மன்றத்தின் வெளியீடான ஆசிரியை குமாரி புஷ்பவள்ளி அவர்கள் எழுதிய 'SPM தமிழ் இலக்கிய வழிகாட்டி நூல்' அண்மையில் மலேசியத் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில் நடந்த SPM தமிழ் இலக்கிய கருத்தரங்கில் மிகச் சிறப்பாக வெளியீடு கண்டது. ஜோகூர் மாநிலக் கல்வித்துறை அதிகாரி , தமிழ் மொழித்துணை இயக்குநர் திரு. இரா. விஜயன் அவர்கள் முன்னிலை வகிக்க, கொடை நெஞ்சர், நாடறிந்த தன்முனைப்புப் பேச்சாளர் முனைவர் திரு. ஆதிசேஷன் அவர்கள் இந்நூலை வெளியீடு செய்தார்கள். இந்நூலை அச்சிட்டு வெளியிடுவதற்கான முழுச்செலவையும் ஏற்றுக்கொண்ட அன்னார் அவர்களின் அறப்பணிக்கும் நல்லெண்ணத்திற்கும் மன்றம் என்றென்றும் கடமைப்பட்டுள்ளது. மேலும் இந்நூல் சிறப்பான முறையில் வெளியீடு காண அரும்பாடு பட்ட ஜோகூர் மாநிலக் கல்வித்துறை அதிகாரி , தமிழ் மொழித்துணை இயக்குநர் திரு. இரா. விஜயன், தாமான் யூனிவர்சிட்டி இடைநிலைப்பள்ளி ஆசிரியர் திரு. சு. ரவிச்சந்திரன், ஸ்கூடாய் இடைநிலைப்பள்ளி ஆசிரியர் திரு. கு. பூபதி குப்புசாமி, கூலாய் சுல்தான் அப்துல் ஜாலில் இடைநிலைப்பள்ளி ஆசிரியர் தமிழ்மணி திரு. மு.மதியழகன், ஜோகூர் மாநில மாவட்டப் பாடக்குழுத் தலைவர்கள், ஜோகூர் மாநில இலக்கியப்பாட ஆசிரியர்கள் மற்றும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மன்றம் தனது நன்றி மலர்களைச் சமர்ப்பணம் செய்கின்றது.

2 comments:

 1. ஜோகூர் மாநிலத்தில் இடைநிலைப்பள்ளி தமிழாசிரியர்கள் மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வு நினைவில் நிற்கும் வகையில் அமைந்தது.

  அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ஆசிரியை குமாரி புஷ்பவள்ளி
  அவர்களின் 'மனவோட்ட வரை'‍, சித்திரக் கதை யுக்தி தமிழ் இலக்கியத்திற்கு புதிது! அவரது ஆக்கச்சிந்தனைக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

  அன்புடன்,
  வாசுதேவ‌ன் இல‌ட்சும‌ண‌ன்

  ReplyDelete
 2. மறுமொழி பதிவு செய்த இனிய நண்பர் திரு. வாசுதேவன் அவர்களுக்கும் கழகத்தின் நன்றிகள் உரித்தாகட்டும்.

  தங்களின் மனமுவந்த பாராட்டுகள் நூலாசிரியரை மேலும் மேலும் ஊக்கப்படுத்தும் என்பது திண்ணம்.

  நமது கழகத்துக்கும் தோள் கொடுங்கள்.
  சீரிய பணிகளைச் சிறப்புடன் செய்வோம்.

  நன்றி.

  ReplyDelete